கென்யாவில் சுற்றுலாவின் போது பயங்கரம்: சாலை விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 5 பேர் பலி
கென்யாவில் சுற்றுலாவின் போது பயங்கரம்: சாலை விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 5 பேர் பலி
கென்யாவில் சுற்றுலாவின் போது பயங்கரம்: சாலை விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 5 பேர் பலி
ADDED : ஜூன் 10, 2025 08:01 PM

நைரோபி: கென்யாவில் நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 5 பேர் பலியான விவரம் வெளியாகி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
கத்தாரில் இருந்து 28 பேர் கொண்ட இந்திய குழுவினர் கென்யாவுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்களில் 14 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். அனைவரும் பஸ் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் பயணித்த பஸ், நயான்துரா கவுண்டி அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையில் இருந்து விலகிச் சென்றது. கட்டுப்பாட்டை இழந்த பஸ், 100 மீட்டர் ஆழம் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்தவர்களில் 5 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 4 ஆண்கள், ஒரு பெண் மற்றும் குழந்தை ஆவர். பலியான அனைவரும் பாலக்காடு,திருச்சூர், பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
பலியானவர்களின் பெயர் விவரம் வருமாறு;
ரியா (41), பாலக்காடு
டியரா (7), பாலக்காடு
கீதா ஷோஜி ஐசக், திருவல்லா
ஜாஸ்னா குட்டிக்கட்டுச்சாலில் (29)
ருபி மேஹ்ரின்
விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பலியான ரியாவின் கணவர் ஜோயல், மகன் டிராவிஸ் இருவரும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தை கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்து, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;
கத்தாரில் இருந்து 28 இந்தியர்கள் கொண்ட குழுவினர் கென்யாவுக்கு வந்தனர். இங்கு அவர்கள் பயணித்த பஸ் எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கியது. தற்போது கிடைத்த தகவல்களின் படி 5 பேர் உயிரிழந்துள்ளனர். நைரோபியில் இருந்து அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை ஆராய்ந்து தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
கத்தாரில் உள்ள இந்திய சமூகத்தினருடன் தொடர்பில் இருக்கின்றோம். எதிர்பாராத விபத்தில் சிக்கி உயிரை இழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
விபத்து மற்றும் பலியானவர்கள், சிகிச்சையில் உள்ளவர்களின் நிலைமையை பற்றி தெரிந்து கொள்ள கத்தாரில் உள்ள இந்திய தூதரகத்தை +974 55097295 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.