ராகுலின் ஆணவத்தை அடக்குவோம்: அமித்ஷா பேச்சு
ராகுலின் ஆணவத்தை அடக்குவோம்: அமித்ஷா பேச்சு
ராகுலின் ஆணவத்தை அடக்குவோம்: அமித்ஷா பேச்சு
ADDED : ஜூலை 21, 2024 04:59 PM

புனே: ‛‛ வரவிருக்கும் மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஹரியானா மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் ஆணவத்தை அடக்குவோம்'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் நடந்த பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: 2014, 2019ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலை விட வரும் மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணி சிறப்பாக செயல்படும். அதிக தொகுதிகளில் வெற்றி கிடைக்கும். பா.ஜ.,வின் வெற்றிக்காக ஒவ்வொரு தொண்டனும் உழைக்கின்றனர்.
1993ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேனனுக்கு கருணை கோரியவர்களுடன் உத்தவ் தாக்கரே அமர்ந்துள்ளார். சரத் பவார் ஊழலை நிறுவனமயப்படுத்தினார். மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், தேர்தலில் வெற்றி பெற்று, ராகுலின் ஆணவத்தை நாங்கள் அடக்குவோம். லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடிக்கு மக்கள் அங்கீகாரம் அளித்து உள்ளனர். நாம் கடினமாக உழைத்து, நமக்கு நாமே கடினமான இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். மஹாராஷ்டிராவில் மீண்டும் பாஜ., எழுச்சி பெற வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.