Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கும்பாபிஷேக புறக்கணிப்பு: காங்கிரசின் முட்டாள்தனம்

கும்பாபிஷேக புறக்கணிப்பு: காங்கிரசின் முட்டாள்தனம்

கும்பாபிஷேக புறக்கணிப்பு: காங்கிரசின் முட்டாள்தனம்

கும்பாபிஷேக புறக்கணிப்பு: காங்கிரசின் முட்டாள்தனம்

ADDED : ஜன 12, 2024 11:29 PM


Google News
Latest Tamil News
தட்சிண கன்னடா: ''அயோத்தியில் ஜன., 22ம் தேதி நடக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில், காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்காதது அக்கட்சியின் முட்டாள்தனம்,'' என, ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் கல்லட்கா பிரபாகர் பட் தெரிவித்தார்.

தட்சிண கன்னடாவின் புத்துாரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

ஸ்ரீராமர் நமக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே முழுவதற்குமானவர். ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு செல்லாதவர்கள், ராமர் முன்வைத்த மதம், கலாசாரத்தை அவமதிக்கின்றனர்.

ராமர் கோவில் திட்டம் அரசியல் நிகழ்ச்சி அல்ல. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பது, இந்நாட்டின் பிரதமருக்கு கிடைத்த கவுரவம். இவ்விவகாரத்தில் அரசியல் செய்வது சரியல்ல.

அனைவருக்கும் ராமர் தேவை. ராமர் பிரதிஷ்டை என்பது நமது ஆன்மாவின் பிரதிஷ்டை. சில சுவாமிகள், ராமரை தாழ்த்தப்பட்டவர்கள் தொட்டதாக குற்றம்சாட்டுகின்றனர்.

அயோத்தியில் ஜன., 22ம் தேதி நடக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில், காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்காதது அக்கட்சியின் முட்டாள்தனம்.

ராமரை அனைவரும் தொட வேண்டும். ராமரை ஏன் தொடக்கூடாது? 1989ல் ராமர் கோவில் அடிக்கல் நாட்டப்பட்டபோது, புறக்கணிக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவரால் முதல் செங்கல் வைக்கப்பட்டது. ஜாதியை பற்றி பேசி, தங்கள் மரியாதையை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us