'எனக்கு ஓட்டு போடாவிட்டால் சாப்பிடாமல் அடம் பிடிக்கணும்'
'எனக்கு ஓட்டு போடாவிட்டால் சாப்பிடாமல் அடம் பிடிக்கணும்'
'எனக்கு ஓட்டு போடாவிட்டால் சாப்பிடாமல் அடம் பிடிக்கணும்'
ADDED : பிப் 12, 2024 12:18 AM

மும்பை : ''உங்களுடைய பெற்றோர் எனக்கு ஓட்டு போடாவிட்டால், சாப்பிடாமல் அடம் பிடிக்க வேண்டும்,'' என, சிவசேனா எம்.எல்.ஏ., பள்ளிக் குழந்தைகளிடம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சியின் கலம்னுார் தொகுதியின் எம்.எல்.ஏ., சந்தோஷ் பாங்கர், சமீபத்தில் ஒரு பள்ளி விழாவில் பங்கேற்றார்.
அப்போது, வரும் தேர்தலில் உங்களுடைய பெற்றோர் எனக்கு ஓட்டு போடாவிட்டால், இரண்டு நாட்கள் சாப்பிடாமல் இருந்து அடம் பிடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
''சந்தோஷ் பாங்கருக்கு ஓட்டு போட்டால் தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்க வேண்டும்,'' என்று அவர் கூறினார். அதை திருப்பிச் சொல்லும்படி குழந்தைகளிடம் கூறியுள்ளார். அவர் கூறியது புரியாமல், அங்கிருந்த 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் திருதிருவென விழித்தனர்.
இது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரசாரங்களில் குழந்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் கமிஷன் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, சந்தோஷ் பாங்கர் மீது நடவடிக்கை எடுக்கும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.