ஐஸ்கிரீமில் கிடந்த மனித விரல்: பெண் அதிர்ச்சி
ஐஸ்கிரீமில் கிடந்த மனித விரல்: பெண் அதிர்ச்சி
ஐஸ்கிரீமில் கிடந்த மனித விரல்: பெண் அதிர்ச்சி
ADDED : ஜூன் 13, 2024 12:18 PM

மும்பை: ஆன்லைன் மூலம் வாங்கிய கோன் ஐஸ்கிரீமில் மனித விரலை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் ஒருவர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வடக்கு பகுதியில் உள்ள மாலட் என்ற நகரில் வசித்து வந்த பெண் ஒருவர் ஆன்லைன் மூலம் கோன் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார்.
பார்சல் வந்த போது அதனை பிரித்த பார்த்த அந்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. ஐஸ்கிரீம் மேல் மனித விரல் ஒன்று இருந்தது. இதனை கண்டு அதிர்ந்த அந்த பெண் அதனை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதுடன், போலீசிலும் புகார் அளித்தார். ஐஸ்கிரீம் மற்றும் விரலை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இதில் ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.