'கிரஹலட்சுமி தேவையில்லை 'சாலை போதும்' என குமுறல்
'கிரஹலட்சுமி தேவையில்லை 'சாலை போதும்' என குமுறல்
'கிரஹலட்சுமி தேவையில்லை 'சாலை போதும்' என குமுறல்
ADDED : பிப் 12, 2024 06:43 AM
பெலகாவி: 'எங்களுக்கு கிரஹலட்சுமி திட்டம் தேவையில்லை, சாலை அமைத்து தாருங்கள்' என, பெண்கள் சேர்ந்து பா.ஜ., - எம்.எல்.ஏ., வை முற்றுகையிட்டனர்.
பெலகாவி, கானாபுரா தொகுதி பா.ஜ., -- எம்.எல்.ஏ., விட்டல் ஹலகேகர், நேற்று மதியம் தொகுதியின் கக்கேரி கிராமத்துக்கு வந்திருந்தார்.
அப்போது அவரை சூழ்ந்து கொண்ட பெண்கள், கிராமத்தின் பிரச்னைகளை விவரித்து, சரி செய்யும்படி வேண்டுகோள் விடுத்தனர்.
இதனால், தர்ம சங்கடத்துக்கு ஆளான எம்.எல்.ஏ., 'வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்துவதால், மாநில அரசு தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு நிதியுதவி வழங்கவில்லை' என இயலாமையை தெரிவித்தார்.
இதை கேட்ட பெண்கள், 'எங்களுக்கு 'கிரஹலட்சுமி' திட்டத்தின் கீழ் வழங்கும் 2,000 ரூபாய் தேவையில்லை நல்ல சாலை அமைத்து தாருங்கள்' என மன்றாடினர்.
பெண்களை சமாதானம் செய்த எம்.எல்.ஏ., 'சாலை மேம்பாட்டுக்கு எம்.எல்.ஏ., நிதியில் 10 லட்சம் ரூபாய் வழங்குகிறேன்' என உறுதி அளித்தார்.