Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/இந்தியர்களுக்கு நல்ல செய்தி: வறுமை குறைவதாக ஆய்வறிக்கை தகவல்

இந்தியர்களுக்கு நல்ல செய்தி: வறுமை குறைவதாக ஆய்வறிக்கை தகவல்

இந்தியர்களுக்கு நல்ல செய்தி: வறுமை குறைவதாக ஆய்வறிக்கை தகவல்

இந்தியர்களுக்கு நல்ல செய்தி: வறுமை குறைவதாக ஆய்வறிக்கை தகவல்

ADDED : ஜூலை 04, 2024 12:20 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: 2011 - 2012 ம் ஆண்டு இந்தியாவில் 21 சதவீதமாக இருந்த வறுமை, 2022- 24 ல் 8.5 சதவீதமாக குறைந்து உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சோனால்டி தேசாய் தலைமையிலான என்சிஏஇஆர் என்ற அறிவு சார்ந்த பொருளாதார அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தி அதன் முடிவுகளை 'Rethinking Social Safety Nets in a Changing Society' என்ற தலைப்பில் வெளியிட்டது. இந்திய மனித வளர்ச்சி கணக்கெடுப்பு ( ஐஎச்டிஎஸ்) அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஐஎச்டிஎஸ் அடிப்படையில், இந்தியாவில் வறுமை தொடர்ந்து குறைந்து வருகிறது. 2004 - 2005 ல் 38.6 சதவீதமாக இருந்த வறுமை, 2011- 12 ல் 21.2 சதவீதமாக குறைந்தது. இது, கோவிட் பெருந்தொற்று ஏற்படுத்திய சவாலுக்கு மத்தியிலும் 2022- 2024 ல் மேலும் குறைந்து 8.5 சதவீதமாக குறைந்தது. பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமைக் குறைவு ஆகியவை வேகமான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் தேவைப்படும் ஒரு சூழலை உருவாக்குகிறது.

பொருளாதார வளர்ச்சியின் சகாப்தத்தில் வாய்ப்புகள் அதிகரிக்கும் போது நீண்ட காலமாக இருக்கும் வறுமை குறைய கூடும். வறுமையில் இருக்கும் மக்களை பொருளாதாரத்தில் உயர்வதற்காக வழிமுறைகளை செயல்படுத்தி வருகிறது. இதனால், வறுமை கணிசமாக குறைந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us