உலக கோப்பையுடன் இந்திய வீரர்கள்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு
உலக கோப்பையுடன் இந்திய வீரர்கள்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு
உலக கோப்பையுடன் இந்திய வீரர்கள்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு
UPDATED : ஜூலை 04, 2024 11:39 AM
ADDED : ஜூலை 04, 2024 11:35 AM

புதுடில்லி: டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள், பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
வெஸ்ட் இண்டீசில் நடந்த 'டி20' உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் இந்திய அணி, தென்ஆப்ரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 'சாம்பியன்' பட்டம் வென்றது. 17 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அங்கிருந்து இன்று (ஜூலை 4) காலை, டில்லி விமான நிலையத்திற்கு வந்த இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், டி20 உலக கோப்பையுடன் இந்திய வீரர்கள், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். வீரர்கள் அனைவரும் பிரதமர் மோடியுடன் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மதியம் மும்பை வரும் வீரர்கள், மாலையில் மரைன் டிரைவ் பகுதியில் இருந்து வான்கடே மைதானம் வரை, திறந்தவெறி பஸ்சில் ஊர்வலமாக (ரோடு ஷோ) செல்ல உள்ளனர். இரவில் வீரர்களுக்கு வான்கடே மைதானத்தில், பாராட்டு விழா நடக்கும். பின் பி.சி.சி.ஐ., சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.