சொன்னதை செய்வேன்: தேர்தல் தோல்வியால் பதவியை ராஜினாமா செய்த ராஜஸ்தான் அமைச்சர்!
சொன்னதை செய்வேன்: தேர்தல் தோல்வியால் பதவியை ராஜினாமா செய்த ராஜஸ்தான் அமைச்சர்!
சொன்னதை செய்வேன்: தேர்தல் தோல்வியால் பதவியை ராஜினாமா செய்த ராஜஸ்தான் அமைச்சர்!
ADDED : ஜூலை 04, 2024 12:50 PM

ஜெய்ப்பூர்: தான் பிரசாரம் மேற்கொண்ட, 7 தொகுதிகளில் 4ல் பா.ஜ., தோல்வி அடைந்த காரணத்தால், தோல்விக்கு பொறுப்பேற்று ராஜஸ்தான் மாநில வேளாண்மை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரோடி லால் மீனா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அண்மையில் நடந்த லோக்சபா தேர்தலில், ஏழு லோக்சபா தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் தோல்வி அடைந்தால், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என கிரோடி லால் மீனா கூறியிருந்தார்.
அவரது சொந்த தொகுதியான தௌசா உட்பட நான்கு தொகுதிகளில் பா.ஜ., தோல்வி அடைந்தது. இதனால் அவர் அதிருப்தி அடைந்தார். தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே, அவர் தனது அமைச்சர் அலுவலகத்திற்கு வராமல் இருந்தார்.
தோல்விக்கு பொறுப்பேற்று, இன்று (ஜூலை 04) கிரோடி லால் மீனா (வயது 72), தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை இன்னும் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா ஏற்று கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.