மூன்று புற்றுநோய் மருந்துகளுக்கான வரி முற்றிலும் நீக்கம்
மூன்று புற்றுநோய் மருந்துகளுக்கான வரி முற்றிலும் நீக்கம்
மூன்று புற்றுநோய் மருந்துகளுக்கான வரி முற்றிலும் நீக்கம்
UPDATED : ஜூலை 23, 2024 04:47 PM
ADDED : ஜூலை 23, 2024 12:23 PM

புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி, மொபைல்போன் உதிரிபாகங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டு உள்ளது.
பார்லிமென்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) தாக்கல் செய்த பட்ஜெட்டில், பல்வேறு திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் மற்றும் வரி விகிதங்களில் மாற்றங்கள் போன்றவை இடம்பெற்றிருந்தன. இதில் சுங்க வரி விகிதங்கள் மாற்றி அறிவிக்கப்பட்டதால், பல பொருட்களின் விலைகள் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
*தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரி 15 % ல் இருந்து 6 % ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இவைகளின் விலை பெருமளவு குறையும்.
*பிளாட்டினம் மீதான சுங்கவரி 6.4 % ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
*மொபைல்போன் உதிரி பாகங்கள், சார்ஜர்கள், மீதான சுங்க வரி 18 ல் இருந்து 15 % ஆகவும் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் மொபைல் போன்களின் விலை கணிசமாக குறையும்.
*25 முக்கிய கனிமங்களை இறக்குமதி செய்ய சுங்கவரி செலுத்துவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதில் இரண்டு கனிமங்களுக்கு மட்டும் வரி குறைக்கப்பட்டுள்ளது.
*மூன்று புற்றுநோய் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான உற்பத்தி வரி முற்றிலும் நீக்கப்பட்டு உள்ளது.
*பிளாஸ்டிக் பொருட்களுக்கான சுங்கவரி 15% ல் இருந்து 25% ஆக அதிகரிக்கப்படும்.
*தொலைத்தொடர்பு சாதனங்களுக்கான சுங்க வரி 10ல் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும்.
*சூரிய மின்கலங்கள் மற்றும் பேனல்கள் தயாரிப்பில் பயன்படுத்தும் மூலப்பொருட்களுக்கு வரி நீக்கப்படுகிறது. இதனால் சோலார் பேனல்களின் விலை குறையும். இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டு உள்ளது.