Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.11 லட்சம் கோடி

உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.11 லட்சம் கோடி

உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.11 லட்சம் கோடி

உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.11 லட்சம் கோடி

UPDATED : ஜூலை 23, 2024 12:46 PMADDED : ஜூலை 23, 2024 12:07 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: நாடு முழுவதும் உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்த ரூ.11 லட்சம் கோடி மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு உள்ளது. இது நாட்டின் மொத்த ஜிடிபி.,யில் 3.4 சதவீதம் ஆகும்.

* பெண்கள் வேலைக்கு செல்வதை ஊக்குவிக்க மகளிர் விடுதிகள் அமைக்கப்படும்.

* மத்திய அரசு நிதியுதவியுடன் மாநில அரசுகள் தொழில்துறையுடன் இணைந்து திறன் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும். இதில் 5 ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

* ஆயிரம் ஐடிஐ.,க்கள் தரம் உயர்த்தப்படும்.

* நாட்டின் கிழக்கு பகுதி வளர்ச்சி பெற தொழில்துறை காரிடர் அமைக்க ஆதரவு அளிக்கப்படும்.

* சென்னை ஹைதராபாத் விசாகப்பட்டினம் தொழில் வழித்திட திட்டம்

*சிறு குறு நடுத்தர தொழில்துறையினர் வளர்ச்சிக்காக கடன் உறுதி திட்டம்

கடன் தொகை அதிகரிப்பு


*முத்ரா திட்டத்தில் வழங்கப்படும் கடன் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் ஆக உயர்வு

*உணவின் தரத்தை பரிசோதிக்கும் வகையில் நாட்டில் மேலும் 100 தர பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும்.

*முன்னணியில் உள்ள 500 நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு உதவித் தொகையுடன் ‛இன்டர்ன்ஷிப்' பயிற்சி அளிக்கப்படும்

*அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மேலும் 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்படும்

*உள்நாட்டில் உள்ள தாதுக்கள் கனிம வளங்களை மறுசுழற்சி செய்யும் வகையில் புதிய திட்டம்

*இளைஞர்களுக்காக ஆயிரம் தொழில்துறை நிறுவனங்களில் பயிற்சி அளிக்கப்படும்.

ஆணையம்


*அதிக பத்திரப்பதிவு நடக்கும் மாநிலங்களில் கட்டணங்களை குறைக்க வலியுறுத்தப்படும்

*திவாலான நிதி நிறுவனங்களிடம் இருந்து மக்களுக்கு பணத்தை பெற்றுத்தர ஆணையம் அமைப்பு

*அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் வாடகை வீடு திட்டம் செயல்படுத்தப்படும்

*தொழிற்சாலைகளில் பணியாற்றுவோருக்கு வாடகை வீடு திட்டம்

*மாநில அரசு வங்கிகளுடன் இணைந்து திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய திட்டம்

*வீடுகளின் மேற்கூரையில் சோலார் தகடு அமைப்பதன் மூலம் மின் செலவை குறைக்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும்

*12 தொழில் பூங்காக்களுக்கு விரைவில் ஒப்புதல் அமல்படுத்தப்படும்.

அணு உலை


*தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பாரத் சிறு அணு உலைகள் அமைக்கப்படும்

*மாநில அரசுகளோடு இணைந்து பல்வேறு நகரங்களை வளர்ச்சி மையமாக அரசு மேம்படுத்தும்.

* ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் மின்வசதி ஏற்படுத்தப்படும்

*உள்கட்டமைப்பை மேம்படுத்த நீண்ட கால வட்டியில்லா கடன் ரூ.1.5 லட்சம் கோடி வழங்கப்படும்.

* நாடு முழுவதும் உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்த ரூ.11 லட்சம் கோடி. இது நாட்டின் மொத்த ஜிடிபி.,யில் 3.4 சதவீதம் ஆகும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us