பா.ஜ.,வுக்கு செல்கிறேனா? காங்., ---- எம்.எல்.ஏ., விளக்கம்!
பா.ஜ.,வுக்கு செல்கிறேனா? காங்., ---- எம்.எல்.ஏ., விளக்கம்!
பா.ஜ.,வுக்கு செல்கிறேனா? காங்., ---- எம்.எல்.ஏ., விளக்கம்!
ADDED : பிப் 12, 2024 06:33 AM

''பா.ஜ.,வுக்கு செல்லும் பேச்சுக்கே இடமில்லை,'' என்று, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜு காகே கூறி உள்ளார்.
பெலகாவி காக்வாட் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜு காகே. அதானி காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதியின் தீவிர ஆதரவாளர். ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.,வுக்கு சென்றது போல, லட்சுமண் சவதியும், ராஜு காகேயும் பா.ஜ.,வுக்கு செல்வர் என்று தகவல் வெளியானது.
இதுகுறித்து காக்வாட்டில் நேற்று ராஜு காகே அளித்த பேட்டி:
ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் இருந்து, பா.ஜ.,வுக்கு சென்ற பின்னர், அரசியலில் சில யூகங்கள் உருவாகி உள்ளன. எக்காரணம் கொண்டும் நானும், லட்சுமண் சவதியும் பா.ஜ., செல்லும் பேச்சுக்கே இடமில்லை.
அந்த கட்சியில் இருக்க விருப்பம் இல்லாமல் தான், இரண்டு பேரும் வெளியேறினோம். மறுபடியும் எதற்கு அங்கு செல்ல வேண்டும்.
நாங்கள் பா.ஜ.,வுக்கு செல்ல போகிறோம் என்பது, ஊடகங்கள் உருவாக்கும் கட்டுக்கதை. அவர்களின் டி.ஆர்.பி.,யை அதிகரிக்க, இதுபோன்ற செய்திகளை வெளியிட்டு, மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். ஊடகங்கள் உண்மையான செய்தியை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -