பீகார் வாலிபர் கொலையில் நண்பர் கைது துப்பு துலக்க உதவிய விமான டிக்கெட்
பீகார் வாலிபர் கொலையில் நண்பர் கைது துப்பு துலக்க உதவிய விமான டிக்கெட்
பீகார் வாலிபர் கொலையில் நண்பர் கைது துப்பு துலக்க உதவிய விமான டிக்கெட்
ADDED : ஜன 06, 2024 06:55 AM

கோலார்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பார் என்று, பீகார் வாலிபரை கொன்ற, நண்பர் கைது செய்யப்பட்டார். விமான டிக்கெட் மூலம், போலீசார் துப்பு துலக்கினர்.
கோலார் எஸ்.பி., நாராயணா நேற்று அளித்த பேட்டி:
கோலார் ரூரல் ஆலஹள்ளி கிராமத்தில் கடந்த 18ம் தேதி காலை, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த விமான டிக்கெட்டை கொண்டு விசாரணையை துவக்கினோம். இதில் அவர், பீகாரை சேர்ந்த லால்து பண்டிட், 34, என்பது தெரிந்தது.
அசாம் கவுகாத்தியில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் வந்ததும் தெரிந்தது. லால்துவின் முகவரியை கண்டுபிடிக்க, பீகார் போலீசார் உதவியை நாடினோம். அவர்களிடம் இருந்து சரியான பதில் இல்லை.
கள்ளக்காதல்
அதன்பின், கொலையான இடத்தை சுற்றி, குறிப்பிட்ட நேரத்தில் பதிவாகி இருந்த, மொபைல் போன் டவர்களை ஆய்வு செய்தோம். சந்தேகத்தின்பேரில் சிலரை பிடித்து விசாரித்தோம். இறுதியில் ராஜேஷ் யாதவ், 33, என்பவர் கைது செய்யப்பட்டார்.
கொலையான லால்துவும், ராஜேஷும் நண்பர்கள். லால்துவுக்கு திருமணமாகி மனைவி, நான்கு பெண் குழந்தைகள் இருந்தனர். ஆனால் மனைவி, குழந்தைகளை அவர் சரியாக கவனிக்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் ராஜேஷுக்கும், லால்துவின் மனைவிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.
பெங்களூரில் வேலை வாங்கித் தருவதாக, லால்துவின் மனைவியை, ராஜேஷ் அழைத்து வந்து உள்ளார். மகள்களையும் லால்து மனைவி தன்னுடன் அழைத்து வந்தார்.
ஆவலஹள்ளியில் லால்து மனைவி, குழந்தைகளை வீடு எடுத்து, ராஜேஷ் தங்க வைத்தார். அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்து உள்ளனர். இந்நிலையில் லால்துவின் பெண் குழந்தைகள் மீதும், ராஜேஷ் கண் வைத்து உள்ளார்.
மனைவிக்கு தொடர்பு
இதுபற்றி அறிந்த லால்துவின் மனைவி, கணவருடன் மொபைல் போனில் பேசி, தங்களுடன் வந்து இருக்கும்படி அழைத்து உள்ளார். அதன்படி பெங்களூரு வந்த லால்துவை, விமான நிலையத்திற்குச் சென்று ராஜேஷ் அழைத்து வந்தார்.
லால்து இங்கேயே தங்கினால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பார் என்று நினைத்து, லால்து தலையில் சுத்தியலால் அடித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும், ராஜேஷ் கொன்று உள்ளார். இந்த கொலையில் லால்துவின் மனைவிக்கு, எந்த தொடர்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.