ஆண் குழந்தை விற்பனை தாய் உட்பட ஐந்து பேர் கைது
ஆண் குழந்தை விற்பனை தாய் உட்பட ஐந்து பேர் கைது
ஆண் குழந்தை விற்பனை தாய் உட்பட ஐந்து பேர் கைது
ADDED : ஜன 05, 2024 04:55 AM
ஹாசன பச்சிளம் ஆண் குழந்தையை விற்பனை செய்த வழக்கில், தாய், ஆஷா ஊழியர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
ஹாசன் சக்லேஸ்பூர் குழந்தைகள் நல அதிகாரி காந்தராஜ், நேற்று முன்தினம் சக்லேஸ்பூர் போலீசில் ஒரு புகார் அளித்தார்.
அந்த புகாரில், ஹெட்டூர் கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 15ம் தேதி பிறந்த ஆண் குழந்தை விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவும், குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கும்படியும் கூறி இருந்தார். போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் கிரிஜா என்ற பெண், தனக்கு பிறந்த ஆண் குழந்தையை, ஆஷா ஊழியர் சுமித்ரா உதவியுடன், சிக்கமகளூரை சேர்ந்த ஸ்ரீகாந்த், உஷா, சுப்பிரமணி ஆகியோரிடம் விற்றது தெரிந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் சிக்கமகளூரு சென்ற போலீசார், குழந்தையை மீட்டு, ஹாசன் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர். தாய் உட்பட ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர்.
ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருப்பதால், மூன்றாவதாக பிறந்த குழந்தையை வளர்க்க முடியாது என்று கருதி விற்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ஆனால், குழந்தையை எவ்வளவு ரூபாய்க்கு, தாய் விற்றார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து அவரிடம் விசாரணை நடக்கிறது.