முதல்முறை: மணிப்பூரைச் சேர்ந்தவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம்
முதல்முறை: மணிப்பூரைச் சேர்ந்தவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம்
முதல்முறை: மணிப்பூரைச் சேர்ந்தவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம்
ADDED : ஜூலை 16, 2024 03:41 PM

புதுடில்லி: உயர்நீதிமன்ற நீதிபதிகள் இரண்டு பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அதில், மணிப்பூரைச் சேர்ந்த நீதிபதி முதல்முறையாக உச்சநீதிமன்றத்தில் பணியாற்ற உள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியையும் சேர்த்து மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34. இரண்டு இடங்கள் காலியாக இருந்தது.
இந்நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேவல் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன், காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோடிஸ்வர் சிங் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
இதில், கோடிஸ்வர் சிங் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இம்மாநிலத்தில் இருந்து உச்சநீதிமன்றத்திற்கு தேர்வான முதல் நபர் என்ற பெருமை இவருக்கு கிடைத்து உள்ளது.