பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு காங்., எதிரானது: சொல்கிறார் அமித் ஷா
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு காங்., எதிரானது: சொல்கிறார் அமித் ஷா
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு காங்., எதிரானது: சொல்கிறார் அமித் ஷா
ADDED : ஜூலை 16, 2024 03:54 PM

சண்டிகர்: பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு காங்கிரஸ் எதிரானது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
ஹரியானா மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலா மாவட்டத்தில், நடந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ளது. பா.ஜ., முழுப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு காங்கிரஸ் எதிரானது. 1980ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா ஓ.பி.சி., இடஒதுக்கீட்டை எதிர்த்தார்.
முஸ்லீம் இடஒதுக்கீடு
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கியது. அவர்கள் இங்கு ஆட்சி அமைத்தால் இங்கேயும் அதுதான் நடக்கும். ஹரியானாவில் முஸ்லீம் இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார். கடந்த 15 நாட்களில் ஹரியானா மாநிலத்திற்கு அமித்ஷா 2 முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.