மேகதாது அணை கட்ட அனுமதியுங்கள்: தமிழக அரசுக்கு கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் வலியுறுத்தல்
மேகதாது அணை கட்ட அனுமதியுங்கள்: தமிழக அரசுக்கு கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் வலியுறுத்தல்
மேகதாது அணை கட்ட அனுமதியுங்கள்: தமிழக அரசுக்கு கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 16, 2024 01:41 PM

பெங்களூரு: மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக தலைவர்கள் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் தமிழகத்திடம் என்னுடைய ஒரே கோரிக்கை. மேகதாது நீர்தேக்க அணையின் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
இந்த அணையால் கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய இரண்டு மாநிலமும் சரிசமமாக பலனடையும். இரண்டு மாநிலங்களின் செழிப்புக்கும் இந்த நடவடிக்கை அவசியம். மேகதாது நீர்தேக்க அணையின் கட்டுமானப் பணிகளுக்கு தமிழகம் பச்சைக் கொடி காட்டி, பிராந்தியத்தின் வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தை நோக்கி பயணிப்பதற்கு பங்களிக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார்.