7- வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதி அமைச்சர்: சாதனை படைக்கிறார் நிர்மலா
7- வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதி அமைச்சர்: சாதனை படைக்கிறார் நிர்மலா
7- வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதி அமைச்சர்: சாதனை படைக்கிறார் நிர்மலா
UPDATED : ஜூலை 21, 2024 08:10 PM
ADDED : ஜூலை 21, 2024 07:58 PM

புதுடில்லி : வரும் 23-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் 7 வது முறையாக தாக்கல் செய்யும் நிதியமைச்சர் என்ற சாதனைக்கு உரித்தாகிறார் நிர்மலா சீதாராமன்.
1959-ம் ஆண்டு முதல் 1964 வரையில் நாட்டின் நிதி அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் தொடர்ந்து ஆறு பட்ஜெட்களை தாக்கல் செய்துள்ளார். இதில் ஐந்து முழு பட்ஜெட்டும், ஒன்று இடைக்கால பட்ஜெட்டும் அடங்கும்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலமாக ஆட்சி அமைத்த பா.ஜ., சார்பில் நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் 7 வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இதனையடுத்து முந்தைய தேசாய் சாதனையை முறியடித்து தொடர்ந்து 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற புதிய சாதனையை அவர் படைக்க உள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பிப்1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதன் பிறகு ஜூலை மாதம் புதிய அரசாங்கத்தால் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில் வரும் 22-ம் தேதி பார்லி., மழைக்காலகூட்டத்தொடர் துவங்குகிறது. 23 ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.