நில பிரச்னை: ம.பி.,யில் ஜல்லிகற்களால் பெண்கள் புதைப்பு
நில பிரச்னை: ம.பி.,யில் ஜல்லிகற்களால் பெண்கள் புதைப்பு
நில பிரச்னை: ம.பி.,யில் ஜல்லிகற்களால் பெண்கள் புதைப்பு
ADDED : ஜூலை 21, 2024 11:17 PM

போபால்: ம.பி., மாநிலத்தில் நிலதகராறில் உயிருடன் புதைக்கப்பட்ட இரண்டு பெண்கள் மீட்கப்பட்டனர்.
ம.பி., மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள ஹினவ்டாவில் மங்காவா காவல்நிலைய பகுதியில் கட்டுமான பணி நடந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்பணிக்காக கிராவல் மண் எடுக்க நிலம் தோண்டப்பட்டுள்ளது. தோண்டப்படும் நிலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது என கூறி மம்தா பாண்டே மற்றும் ஆஷா பாண்டே என்ற இரு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இருப்பினும் அவர்களின் ஆட்சேபனைகளை பொருட்படுத்தாமல் உள்ளூர் பிரமுகர்களின் உதவியின் மூலம் டிப்பர் டிரைவர் அப்பெண்களின் மீது ஜல்லிகற்களை கொட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது.
பிரச்னை தீவிரமானதை அடுத்து அப்பகுதி வாசிகள் திரண்டு வந்து சம்பந்தப்பட்ட இரு பெண்களையும் மீ்ட்டனர். இதில் ஒருவர் மயக்கமடைந்தார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இருவரும் கங்கே என்னுமிடத்தில் உள்ள சமூக நல மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
சம்பவம் குறித்து போலீ்ஸ் அதிகாரி விவேக்சிங் கூறுகையில், பெண்களின் மீது ஜல்லிகற்களை கொட்டி புதைக்கப்பட்ட சம்பவத்திற்கு காரணமானவர்கள் என மூன்று பேர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர் என கூறினார்.