ஒடிசா மாநில காங்., கூண்டோடு கலைப்பு : மல்லிகார்ஜூன கார்கே
ஒடிசா மாநில காங்., கூண்டோடு கலைப்பு : மல்லிகார்ஜூன கார்கே
ஒடிசா மாநில காங்., கூண்டோடு கலைப்பு : மல்லிகார்ஜூன கார்கே
ADDED : ஜூலை 21, 2024 07:31 PM

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் கிடைத்த படுதோல்வியை அடுத்து ஒடிசா மாநில காங்., கட்சியை கூண்டோடு கலைக்கப்பட்டு உள்ளதாக கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்து உள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மொத்தம் உள்ள 543 இடங்களில் ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்களை எந்த ஒரு கட்சியும் தனிப்பட்ட முறையில் பெற முடியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சியான பா.ஜ., 240 இடங்களைமட்டுமே பெற்றது. மிகவும் எதிர்பார்த்த உ.பியில் போதுமான இடங்கள் கிடைக்க பெற வில்லை அதே நேரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக ஒடிசா மாநிலத்தில் மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் 20 இடங்களை வென்றது.
அதே நேரத்தில் லோக்சபாவில் காங்., தனிப்பட்ட முறையில் 99 இடங்களை மட்டுமே வென்றது. மேலும் ஒடிசா மாநிலத்தில் ஒரு இடத்தில் மட்டுமே வென்றது.
இதனையடுத்து அம்மாநிலத்தில் கிடைத்த மோசமான தோல்வியை அடுத்து மாநில காங்கிரஸ் கட்சியை கூண்டோடு கலைக்கப்பட்டு உள்ளதாக தேசிய தலைவர் மல்லிகார்ஜூன தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: மாநிலத்தில் கட்சியின் பல்வேறு பிரிவுகளில் உள்ள தலைவர்கள், செயற்குழு , மாவட்ட அளவில் தொகுதி , மண்டல அளவிலான கட்சி கமிட்டிகள் கலைக்கப்படுகின்றன.
புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படும் வரையில் , தற்போதைய தலைவர்கள் செயல் தலைவர்களாக செயல்படுவார்கள் என தெரிவித்து உள்ளார்.