3 வயது சிறுவனை கொன்ற சித்தப்பா கைது
3 வயது சிறுவனை கொன்ற சித்தப்பா கைது
3 வயது சிறுவனை கொன்ற சித்தப்பா கைது
ADDED : ஜூன் 21, 2024 05:51 AM

சிக்கபல்லாபூர்: சிக்கபல்லாபூரில், 3 வயது சிறுவனை கழுத்தை நெரித்து கொன்ற, சித்தப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.
சிக்கபல்லாபூர், சிந்தாமணி நிம்மகாயலஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத், 33. இவரது மனைவி ஸ்ரீஜா, 31. இவர்கள் மகன் கவுதம், 3. மஞ்சுநாத் வீட்டில் அவரது தம்பி ரஞ்சித், 30, என்பவரும் வசித்து வந்தார். திருமணமாகாத இவர், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு, கவுதமை வீட்டிலிருந்து ரஞ்சித் அழைத்து சென்றார். பின்னர் அவர் மட்டும் வீட்டிற்கு திரும்பி வந்தார். கவுதம் பற்றி பெற்றோர் கேட்டபோது, ரஞ்சித் பதில் சொல்லவில்லை. இதனால் கவுதமை பெற்றோர் தேடினர். அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும், கட்டடத்தில் கவுதம் இறந்து கிடந்தார். அவரை கழுத்தை நெரித்து ரஞ்சித் கொன்றது தெரிந்தது.
மஞ்சுநாத் அளித்த புகாரில் பட்லஹள்ளி போலீசார், ரஞ்சித்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.