நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க புதிய கொள்கை
நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க புதிய கொள்கை
நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க புதிய கொள்கை
ADDED : ஜூன் 21, 2024 05:50 AM

பெங்களூரு: ''கர்நாடகா மாநிலம் முழுதும், நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பது தொடர்பாக, புதிய கொள்கையை செயல்படுத்த அரசு ஆலோசிக்கிறது,'' என சிறிய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் போஸ்ராஜு தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. இதற்கு நகர்மயமாவது, வனப்பகுதிகள் அழிக்கப்படுவதே காரணம். தொழில், விவசாயம் உட்பட அனைத்து மேம்பாட்டுக்கும் நிலத்தடி நீர் மட்டம் அவசியம்.
நீர்மட்டம் குறைந்தால், வருங்கால சந்ததியினருக்கு ஆபத்து ஏற்படும். நிலத்தடி நீர்மட்டம் குறைந்தும், அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
நகர்ப்பகுதி விரிவடைவதால், இயற்கையான முறையில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க, முட்டுக்கட்டை போடுகிறது. இதன் பின் விளைவுகளை, நம் அடுத்த சந்ததியினர் அனுபவிப்பர்.
தற்போதைய வறட்சி காலம், தண்ணீரின் மகத்துவத்தை மக்களுக்கு உணர்த்தியுள்ளது. மழை நீரை சேகரிப்பதன் மூலம், நிலத்தடி நீரை அதிகரிக்கலாம்.
இத்தகைய நடவடிக்கைகளை, நிலத்தடி நீர்மட்ட இயக்குனரகம் ஊக்கப்படுத்துகிறது.
மாநிலம் முழுதும், நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பது தொடர்பாக, புதிய கொள்கையை செயல்படுத்த அரசு ஆலோசிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.