மத்திய அரசின் உளவு அமைப்பின் தலைவர் பதவி நீட்டிப்பு
மத்திய அரசின் உளவு அமைப்பின் தலைவர் பதவி நீட்டிப்பு
மத்திய அரசின் உளவு அமைப்பின் தலைவர் பதவி நீட்டிப்பு
ADDED : ஜூன் 24, 2024 11:11 PM

புதுடில்லி: மத்திய அரசின் உளவுப்பிரிவு (ஐ.பி.)தலைவர் டபன் தேஹா பதவி காலத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உளவு அமைப்பான ஐ.பி. அமைப்பின் தலைவராக டபன் தேஹா உள்ளார். இவரது பதவி காலம் வரும் ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் டபன் தேஹாவின் பதவி காலத்தை மேலும் ஓராண்டிற்குநீட்டித்து மத்திய அமைச்சரவையில் நியமன கமிட்டி உத்தரவிட்டுள்ளது.
டபன்தேஹா 1988 ம் ஆண்டு ஹிமாச்சல்பிரதேச ஐ.பி.எஸ்., கேடரான இவர். 2025-ம் ஆண்டு ஜூன் 30 - வரை பதவியில் இருப்பார்.