சாய்னா நேவலுடன் பாட்மின்டன் விளையாடிய திரவுபதி முர்மு:
சாய்னா நேவலுடன் பாட்மின்டன் விளையாடிய திரவுபதி முர்மு:
சாய்னா நேவலுடன் பாட்மின்டன் விளையாடிய திரவுபதி முர்மு:
ADDED : ஜூலை 10, 2024 10:26 PM

புதுடில்லி: பிரபல பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவலுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாட்மின்டன் விளையாடும் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
விளையாட்டுத்துறையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு மிகுந்த ஆர்வம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டில்லி ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி அலுவலக அதிகாரப்பூர்வ ‛எக்ஸ்' வலைதளத்தில் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஜனாதிபதி மாளிகை வளாகத்திறகுள் உள்ள பேட்மின்டன் கோர்ட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, சல்வார் கம்மீஸ் உடையணிந்து, பிரபல பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவலுடன் விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது.