/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓட்டல் உரிமையாளரிடம் ரூ. 20 ஆயிரம் மோசடி ஓட்டல் உரிமையாளரிடம் ரூ. 20 ஆயிரம் மோசடி
ஓட்டல் உரிமையாளரிடம் ரூ. 20 ஆயிரம் மோசடி
ஓட்டல் உரிமையாளரிடம் ரூ. 20 ஆயிரம் மோசடி
ஓட்டல் உரிமையாளரிடம் ரூ. 20 ஆயிரம் மோசடி
ADDED : ஜூலை 10, 2024 10:01 PM
புதுச்சேரி: புதுச்சேரி ஓட்டல் உரிமையாளரிடம் ரூ. 20 ஆயிரம் மோசடி செய்த நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உருளையன்பேட்டை, நீடராஜப்பர் வீதியைச் சேர்ந்தவர் விநாயகம், 50; புதுச்சேரியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த மாதம் சமூக வலைதளம் மூலம் லண்டனைச் சேர்ந்த பீட்ரஸ் அலெக்ஸ்சாண்டர் என்ற பெண் அறிமுகமானார். ஓட்டலை சமூக வலைத்தளத்தில் விளம்பரப்படுத்துதல் தொடர்பாக, விநாயகம் பீட்ரஸ் அலெக்ஸ்சாண்டரிடம் பேசி வந்தார். கடந்த 26ம் தேதி உறவினர்களை சந்திக்க பீட்ரஸ் அலெக்ஸ்சாண்டர் இந்தியா வருவதாக தெரிவித்தார். இந்நிலையில், கடந்த 26ம் தேதி டில்லி விமான நிலைய, கஸ்டம்ஸ் ஆபிசில் இருந்து பேசுவதாக ஒரு நபர், விநாயகத்திடம் பேசினார்.
அப்போது, பீட்ரஸ் அலெக்ஸ்சாண்டர் ரூ. 90 லட்சம் மதிப்புள்ள பவுண்ட் பணத்துடன் விமான நிலையம் வந்துள்ளதாகவும், அவரிடம் பணத்திற்கான ஆதாரம் இல்லை என, போலீசார் தெரிவித்தனர். பணத்தை மீட்டு செல்ல வேண்டுமானால் ரூ. 1.68 லட்சம் செலுத்த வேண்டும். முதற்கட்டமாக ரூ. 20 ஆயிரம் செலுத்தி பீட்ரஸ் அலெக்ஸ்சாண்டரை மீட்டு செல்லுங்கள். மீத தொகை பின்பு அளியுங்கள் என கூறினார். இதை நம்பி விநாயகம் மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ. 20 ஆயிரம் செலுத்தினார். அடுத்த சில நிமிடத்தில் மேலும் ரூ. 20 ஆயிரம் பணம் செலுத்த மர்ம நபர் கூறியதால் சந்தேகமடைந்த விநாயகம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.