ADDED : ஜூலை 13, 2024 11:10 PM

பா.ஜ., ஆளும் மாநிலங்களில் வேலையின்மை தொற்றுநோய் போல் பரவி உள்ளதாக ராகுல் கூறுகிறார். தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து ஏழு மாதங்கள் ஆகின்றன. ராகுலுக்கு, ஹைதராபாத் ஒஸ்மானியா பல்கலைக்குச் சென்று வேலைவாய்ப்பு குறித்து மாணவர்களை சந்தித்து பேச தைரியம் உள்ளதா?
பந்தி சஞ்சய் குமார், மத்திய அமைச்சர், பா.ஜ.,
எதிர்மறை அரசியல்!
அரசியலமைப்பை எதிர்த்தவர்கள் மற்றும் அதை ஒழிக்க அழைப்பு விடுப்பவர்கள், 'அரசியலமைப்பு படுகொலை தினம்' என்ற எதிர்மறை அரசியலில் ஈடுபடுவதில் ஆச்சரியமில்லை. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள், அதில் நம்பிக்கை உள்ளவர்களால் தான் அதை காப்பாற்றவும் முடியும்.
பிரியங்கா, பொதுச்செயலர், காங்கிரஸ்
இவர்களுக்கு ஏன் வேதனை?
ஜூன் 25-ம் தேதியை அரசியல்அமைப்பு படுகொலை தினமாக கடைப்பிடிக்க முடிவு செய்ததை அடுத்து, அரசியலமைப்பை காக்க வந்தவர்களாக காட்டிக் கொள்பவர்கள் மிகுந்த வேதனைப்படுகின்றனர். அவசரநிலை அமல்படுத்தப்பட்டு, 50 ஆண்டுகள் ஆன பின், என்ன அவசியம் என்று கேட்கின்றனர்.
சுதன்ஷு திரிவேதி, ராஜ்யசபா எம்.பி., - பா.ஜ.,