துப்பாக்கி முனையில் ரூ.3.5 கோடி கொள்ளை: டில்லியில் 12 பேருக்கு "காப்பு"
துப்பாக்கி முனையில் ரூ.3.5 கோடி கொள்ளை: டில்லியில் 12 பேருக்கு "காப்பு"
துப்பாக்கி முனையில் ரூ.3.5 கோடி கொள்ளை: டில்லியில் 12 பேருக்கு "காப்பு"
UPDATED : ஜூலை 18, 2024 05:07 PM
ADDED : ஜூலை 18, 2024 04:36 PM

கிஷன்கஞ்ச்: வடக்கு டில்லியில் உள்ள டிரான்ஸ்போர்ட்டர் அலுவலகத்தில் 3.5 கோடி ரூபாயை கொள்ளையடித்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த வாரம் இங்குள்ள கிஷன்கஞ்ச் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
டிரான்ஸ்போர்ட்டரின் அலுவலகத்திற்குள் நுழைந்த ஒரு கும்பல், துப்பாக்கிமுனையில் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தனிப்படைகள் அமைத்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று (ஜூலை 18) எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.