தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம்: தலைமைச் செயலர் ஆலோசனை
தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம்: தலைமைச் செயலர் ஆலோசனை
தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம்: தலைமைச் செயலர் ஆலோசனை
UPDATED : ஜூலை 18, 2024 05:11 PM
ADDED : ஜூலை 18, 2024 04:52 PM

சென்னை: தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து உயர் அதிகாரிகள், போலீஸ் டிஜிபி உள்ளிட்டோருடன் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். மதுரையில் வாக்கிங் சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகியையும் சிலர் கொலை செய்தனர். இதனால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் உள்துறை செயலாளர் தீரஜ்குமார், டிஜிபி சங்கர்ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.