இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,500 ஐ தாண்டியது: 2 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,500 ஐ தாண்டியது: 2 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,500 ஐ தாண்டியது: 2 பேர் உயிரிழப்பு
ADDED : ஜூன் 01, 2025 10:10 PM

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,758 ஐ தாண்டியது. 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிற்கு மேலும் 360 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,758 ஆக அதிகரித்து உள்ளது.
கேரளாவில் 1,400 பேரும், மஹாராஷ்டிராவில் 485 பேரும், டில்லியில் 436 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா காரணமாக கேரளா மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.