கோவில் உண்டியலை கொள்ளை அடிக்கும் காங்கிரஸ்: சி.டி.ரவி பாய்ச்சல்
கோவில் உண்டியலை கொள்ளை அடிக்கும் காங்கிரஸ்: சி.டி.ரவி பாய்ச்சல்
கோவில் உண்டியலை கொள்ளை அடிக்கும் காங்கிரஸ்: சி.டி.ரவி பாய்ச்சல்
ADDED : பிப் 25, 2024 02:36 AM

சிக்கமகளூரு: ''தாங்கள் உண்மையான மதச்சார்பற்ற கட்சி என்று கூறும் காங்கிரசார், ஹிந்து கோவில்களில் உண்டியலை கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்,'' என, பா.ஜ., முன்னாள் தேசிய பொதுச் செயலர் சி.டி.ரவி குற்றஞ்சாட்டினார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, சிக்கமகளூரில் பா.ஜ., தொண்டர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தை, அக்கட்சியின் முன்னாள் தேசிய பொதுச் செயலர் சி.டி.ரவி துவக்கி வைத்தார். பின், அவர் பேசியதாவது:
லோக்சபா தேர்தலில் தோல்வி அடைவது உறுதி என்பது, காங்கிரசாருக்கு தெரியும். தோல்வி அடைவோம் என்பது தெரிந்தும், ஏன் போட்டியிட வேண்டும்?
முதலில், அமைச்சர்கள், அவர்களின் பிள்ளைகளை களமிறக்க காங்., தலைவர்கள் யோசித்தனர். தற்போது, தோல்வி பயத்தால், அவர்களும் போட்டியிடலாமா என்பது குறித்து யோசிக்கின்றனர்.
சித்தராமையா முதல்வராக இருப்பதை, துணை முதல்வர் சிவகுமார் விரும்பவில்லை.
அடுத்து, அவர் தான் முதல்வர் என்று இப்போதே பேசிக்கொள்கின்றனர். தலித் முதல்வர் என்ற புதிய பேச்சும் ஓடுகிறது.
தாங்கள் உண்மையான மதச்சார்பற்ற கட்சி என்று காங்கிரசார் கூறுகின்றனர். ஆனால், ஹிந்து கோவில்களில் உண்டியலை கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். காங்கிரஸ் மோஸ்ட் கம்யூனல் மற்றும் கிரிமினல் கட்சி.
அரசியல் அமைப்பை மதிப்பதாக கூறும் காங்கிசார், அதை உருவாக்கிய அம்பேத்கர் உயிருடன் இருந்தபோதும், தேர்தலில் தோற்கடித்தனர். இறந்த பின்னரும் அவமானப்படுத்தினர். தற்போது அவர் பெயரில் மக்களை வசீகரம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
காங்கிரசில் வாரிசு அரசியல் தான் நடக்கிறது. அவர்களுக்கு ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.