கேரளாவில் பா.ஜ., கால் பதித்ததற்கு காங்., தான் காரணம்: பினராயி விஜயன் கண்டுபிடிப்பு
கேரளாவில் பா.ஜ., கால் பதித்ததற்கு காங்., தான் காரணம்: பினராயி விஜயன் கண்டுபிடிப்பு
கேரளாவில் பா.ஜ., கால் பதித்ததற்கு காங்., தான் காரணம்: பினராயி விஜயன் கண்டுபிடிப்பு
ADDED : ஜூன் 12, 2024 12:12 PM

திருவனந்தபுரம்: 'கேரள மாநிலம் திருச்சூரில் பா.ஜ., வெற்றிக்கு காங்., கட்சியின் ஓட்டு சரிவு தான் காரணம்' என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூர் லோக்சபா தொகுதியில், போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். இதனால் கேரளாவில் முதன்முறையாக பா.ஜ., கால் பதித்தது. இது தொடர்பாக, அம்மாநில சட்டசபையில் நடந்த விவாதத்தின் போது, முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:
கேரளாவில் 18 லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறித்து கவலைப்படவில்லை. திருச்சூரில் பா.ஜ., வெற்றிக்கு காங்., கட்சியின் ஓட்டு சரிவு தான் காரணம். தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்து, சரி செய்யப்படும்.
விவேகம்
வெறுப்பை பரப்பி, இந்த நாட்டில் தொடர்ந்து வாழ முடியுமா என்று ஒரு பிரிவினர் கவலைப்படும் நிலையை பா.ஜ., உருவாக்கியது. பிரதமர் மோடியை எப்படியாவது ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.
வாக்காளர்கள் காட்டும் விவேகத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கேரளாவில் பா.ஜ., எப்படி ஒரு இடத்தை வென்றது என்பது குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும். தோல்விக்கு பொறுப்பேற்று நான் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கூறுகிறது. ராஜினாமா கோருவதன் பின்னணி என்ன?. இவ்வாறு பினராயி விஜயன் பேசினார்.