ரேபரேலியா? வயநாடா? குழப்பமாக உள்ளது என்கிறார் ராகுல்
ரேபரேலியா? வயநாடா? குழப்பமாக உள்ளது என்கிறார் ராகுல்
ரேபரேலியா? வயநாடா? குழப்பமாக உள்ளது என்கிறார் ராகுல்

நன்றி
லோக்சபா தேர்தலில் உ.பி., மாநிலம் ரேபரேலி மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் வெற்றி பெற்றார். இரண்டில் ஒன்றை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இது குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கூறியுள்ளது. நேற்று ( ஜூன் 11) ரேபரேலி சென்ற ராகுல் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
உத்தரவிட முடியாது
இன்று கேரள வந்த ராகுல், மலப்புரம் பகுதியில் நடந்த பேரணியில் பங்கேற்றார். தொடர்ந்து அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: நாட்டில் உள்ள ஒவ்வொரு வரலாறும் பாரம்பரியமும் நமது அரசியல் சாசனத்தை பாதுகாக்கிறது. தங்களுக்கு என்ன வேண்டும் என்பது குறித்தும், இந்திய மக்களுக்கும் பிரதமர் உத்தரவிட முடியாது என்பதை கேரளா, உ.பி., உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் எடுத்து காட்டி உள்ளன.
எந்த முடிவு
பிறகு வயநாட்டில் நடந்த கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: இரண்டாவது முறையாக என்னை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி. அரசியல்சாசனத்தை பாதுகாக்கவே, 2024 லோக்சபா தேர்தல் நடந்தது. அன்பு மற்றும் பாசத்தால், வெறுப்புணர்வு தோற்கடிக்கப்பட்டது. அடக்கத்தால், ஆணவம் தோற்கடிக்கப்பட்டது.
மக்களே எனது கடவுள்
துரதிஷ்டவசமாக பிரதமர் மோடியை போல் நான் கடவுளால் வழிநடத்தப்படுபவன் அல்ல. நான் சாதாரண மனிதன். ஏழை மக்களே எனது கடவுள். வயநாடு மக்களே எனது கடவுள். என்னை பொறுத்தவரை, நான் மக்களுடன் பேசுவேன். நான் என்ன செய்ய வேண்டும் என அவர்கள் கூறுவர். வயநாடு அல்லது ரேபரேலி தொகுதிகளில், எதில் எம்.பி.,யாக நீடிக்க வேண்டும் என்பதில் குழப்பம் உள்ளது. எந்த முடிவு எடுத்தாலும் இரு தொகுதி மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.