Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/இளம்பெண் மர்ம சாவு கணவர் மீது புகார்

இளம்பெண் மர்ம சாவு கணவர் மீது புகார்

இளம்பெண் மர்ம சாவு கணவர் மீது புகார்

இளம்பெண் மர்ம சாவு கணவர் மீது புகார்

ADDED : பிப் 24, 2024 04:39 AM


Google News
Latest Tamil News
ஹாசன் : இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். கள்ளக்காதலை கண்டித்ததால் கொன்றதாக, கணவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

ஹாசன் சென்னராயப்பட்டணா நாகயனகொப்பலு கிராமத்தில் வசிப்பவர் தர்ஷன், 26. இவரது மனைவி சுரபி, 24. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் இரவு சுரபியின் பெற்றோரிடம், மொபைல் போனில் பேசிய தர்ஷன், “உங்கள் மகள் குறைந்த ரத்த அழுத்தத்தால் இறந்துவிட்டார்,” என்றார்.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விரைந்து வந்து, மகளின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். பின்னர் சென்னராயப்பட்டணா போலீசில் அளித்த புகாரில், 'தர்ஷனுக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்தது. இதை கண்டித்ததால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்ததால், எங்கள் மகளை, தர்ஷன் கொன்றுவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.

அந்த புகாரின்பேரில் போலீசார் தர்ஷனை பிடித்து விசாரிக்கின்றனர். மர்ம சாவு வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us