பாக்.எதிரான போர் யார் தலையீட்டாலும் நிற்கவில்லை; டிரம்பை மறைமுகமாக சாடிய ராஜ்நாத் சிங்
பாக்.எதிரான போர் யார் தலையீட்டாலும் நிற்கவில்லை; டிரம்பை மறைமுகமாக சாடிய ராஜ்நாத் சிங்
பாக்.எதிரான போர் யார் தலையீட்டாலும் நிற்கவில்லை; டிரம்பை மறைமுகமாக சாடிய ராஜ்நாத் சிங்
ADDED : செப் 17, 2025 01:55 PM

ஹைதராபாத்: பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை யாருடைய தலையீட்டாலும் ஒத்தி வைக்கப்படவில்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக கூறி உள்ளார்.
1948ம் ஆண்டு செப்.17ம் தேதி நிஜாம் ஆட்சியின் கீழ் இருந்த ஹைதராபாத் மாநிலம், இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அதை நினைவு கூரும் வகையில், மத்திய அரசானது 2022ம் ஆண்டு முதல் செப்.17ம் தேதியை தெலுங்கானா விடுதலை நாள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதே நாளை தெலுங்கானா அரசானது, தேசிய ஒருங்கிணைப்பு நாள் என்று அறிவித்து கொண்டாடியும் வருகிறது.
கடந்தாண்டை போலவே, இந்தாண்டும் செகந்திரபாத்தில் உள்ள பரேட் மைதானத்தில் விடுதலை நாள் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது;
யாரோ ஒருவரின் தலையீட்டால் (அதிபர் டிரம்பை குறிப்பிடுகிறார்) இந்தியா. பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் ஏற்பட்டதாக சிலர் கூறுகின்றனர். இதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான எங்களின் நடவடிக்கை யாருடைய தலையீட்டாலும் ஒத்தி வைக்கப்படவில்லை. ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
ஏதாவது பயங்கரவாத சம்பவங்கள் அரங்கேறினால், ஆப்பரேஷன் சிந்தூர் மீண்டும் தொடங்கும். நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் மிகுந்த நம்பிக்கையுடன் கூறுகிறேன். சிலர் இந்த நடவடிக்கையை நிறுத்திவிட்டதாக கூறுகின்றனர்.
ஆனால் யாரும் இதை நிறுத்தவில்லை என்பதை நான் நாட்டு மக்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
ஆப்பரேஷன் சிந்தூர் என்ற பயங்கரவாத நடவடிக்கையின் போது, பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பம் அழிக்கப்பட்டதை ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு ஒப்புக் கொண்டுள்ளது. இது நமது ராணுவ வீரர்களின் துணிச்சலையும், நம்பிக்கையையும் காட்டுகிறது.
இந்த வீடியோவும் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில் நாடு மேலும் பலம் பெற்றுள்ளது. நம் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக சவால்விடும் எந்த சக்தியாலும் நம்மை எதுவும் செய்யமுடியாது.
இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.