ஆந்திர முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு: பிரதமர் மோடி, அமித்ஷா, ரஜினி பங்கேற்பு
ஆந்திர முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு: பிரதமர் மோடி, அமித்ஷா, ரஜினி பங்கேற்பு
ஆந்திர முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு: பிரதமர் மோடி, அமித்ஷா, ரஜினி பங்கேற்பு
UPDATED : ஜூன் 12, 2024 01:10 PM
ADDED : ஜூன் 12, 2024 11:36 AM

அமராவதி: ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நடிகர் ரஜினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆந்திரா சட்டசபைக்கு நடந்த தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்றது. விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சியில், ஆந்திர முதல்வராக இன்று(ஜூன் 12) சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். அவருக்கு கவர்னர் நசீர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு மகன் நாரா லோகேஷ் உட்பட 24 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். 4வது முறையாக ஆந்திர மாநில முதல்வரானார் சந்திரபாபு நாயுடு.
பங்கேற்பு
விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நட்டா, நிதின் கட்கரி, சிராக் பஸ்வான், ராம்தாஸ் அத்வாலே, மஹாராஷ்டிரா மாநில முதல்வர் எக்நாத் ஷிண்டே, நடிகர் ரஜினி, அவரது மனைவி லதா, நடிகர்கள் சீரஞ்சீவி, பால கிருஷ்ணன், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், புதுச்சேரி மாநில முன்னாள் கவர்னர் தமிழிசை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாழ்த்து
4வது முறையாக ஆந்திர முதல்வராக பதவியேற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: ஆந்திர முதல்வராக பதவியேற்றுள்ள சந்திரபாபுவின் தலைமை அம்மாநிலத்தில் செழிப்பையும், நலனையும் கொண்டு வரட்டும். ஆந்திரா மற்றும் தமிழகம் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த எதிர்நோக்கி உள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.