ADDED : பிப் 05, 2024 11:47 PM

லோக்சபா தேர்தலில், 'இண்டியா' கூட்டணி வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சி அமைத்தால், நாடு முழுதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்படும். இட ஒதுக்கீட்டில், 50 சதவீதம் என்ற உச்ச வரம்பு நீக்கப்படும்.
ராகுல், எம்.பி., - காங்.,
நிதி நிலைமை மோசம்!
கர்நாடகாவில் நிதி நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது; விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களது கடமையை சரிவர செய்யாத கர்நாடக காங்., அரசு, தேவையில்லாமல், பிரதமர் மோடி மற்றும் பா.ஜ., மீது குற்றம் சாட்டுகிறது.
விஜயேந்திரா, தலைவர், கர்நாடக பா.ஜ.,
ரத்து செய்யப்படவில்லை!
'உதான்' திட்டத்தின் கீழ், 509 விமானவழித்தடங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதில் எந்த வழித்தடமும் ரத்து செய்யப்படவில்லை. வழித்தடங்கள் ஒதுக்கப்படுவதில் ஒரு குறிப்பிட்ட நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.
வி.கே.சிங், மத்திய இணை அமைச்சர், பா.ஜ.,