சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் இருவர் டிஸ்மிஸ்
சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் இருவர் டிஸ்மிஸ்
சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் இருவர் டிஸ்மிஸ்
ADDED : மார் 27, 2025 08:05 PM

சென்னை: சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் இருவர் உட்பட நான்கு பேரை பதவி நீக்கம் செய்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலர் உத்தரவிட்டு உள்ளார்.
இதன்படிசென்னை மாநகராட்சியின் 5வது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம்(தி.மு.க.,)
189 வது வார்டு கவுன்சிலர் பாபு(தி.மு.க.,)
தாம்பரம் மாநகராட்சி 40வது வார்டு கவுன்சிலர் ஜெயபிரதீப்(சுயேச்சை)
உசிலம்பட்டி நகர்மன்ற தலைவரும் 11வது வார்டு கவுன்சிலருமான சகுந்தலா(தி.மு.க.,) ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது; நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் தொடர்பான 1998 ம் ஆண்டு சட்டத்தின் வகைமுறைகளை மீறும் வகையில் செயல்படும் மேயர்கள், துணை மேயர்கள், நகர் மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.