கிணற்றில் மூழ்கி அண்ணன், தங்கை பலி
கிணற்றில் மூழ்கி அண்ணன், தங்கை பலி
கிணற்றில் மூழ்கி அண்ணன், தங்கை பலி
ADDED : ஜன 31, 2024 05:20 AM
கலபுரகி : கிணற்றில் குதித்த தங்கையை காப்பாற்ற சென்ற அண்ணனும் உயிரிழந்தார்.
கலபுரகி சிஞ்சோலியின் பட்டபள்ளி கிராமத்தில் வசித்தவர் சந்தீப், 21. இவரது தங்கை நந்தினி, 18. இவர் சிறு, சிறு விஷயத்துக்கும் பிடிவாதம் பிடிப்பார். பி.யூ.சி.,க்கு பின் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார்.
கல்லுாரிக்குச் செல்லும்படி புத்திமதி கூறியும் கேட்கவில்லை. நேற்று முன்தினம் இரவு, பெற்றோர் படிப்பில் ஆர்வம் காண்பிக்கும்படி, அறிவுரை கூறினர். இதனால் வாக்குவாதம் நடந்தது.
தன்னை திட்டியதால் கோபமடைந்த நந்தினி, வீட்டை விட்டு வெளியே ஓடினார். அவரை சமாதானம் செய்து அழைத்து வர, அண்ணன் சந்தீப், தங்கையை பின் தொடர்ந்து சென்றார்.
அப்போது நந்தினி கிணற்றில் குதித்தார். தங்கையை காப்பாற்ற அண்ணனும் கிணற்றில் குதித்தார். இருவருக்குமே நீச்சல் தெரியாததால், நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
வெளியே சென்ற அண்ணனும், தங்கையும் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் தேட துவங்கினர்.
கிராமத்தின் அருகில் உள்ள கிணற்றில் நந்தினி வைத்திருந்த பூ மிதந்தது. சந்தேகமடைந்து கிணற்றில் தேடியபோது, இருவரின் உடல்களும் கிடைத்தன.
சிஞ்சோலி போலீசார் விசாரிக்கின்றனர்.