100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : செப் 20, 2025 09:33 PM
புதுடில்லி:தலைநகர் டில்லியில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு நேற்று காலை வெடிகுண்டு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. தீவிர ஆய்வுக்குப் பின், புரளி என அறிவிக்கப்பட்டது.
டில்லியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது தொடர்கதையாகி விட்டது. சமீபத்தில், உயர் நீதிமன்றத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இந்நிலையில், நேற்று காலை 6:10 மணிக்கு, துவாரகா பப்ளிக் பள்லி, கிருஷ்ணா மாடல் பள்ளி உட்பட டில்லியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு, 'இ-மெயில்' வாயிலாக வந்த கடிதத்தில், பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.
வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், தீயணைப்புப் படையினர் மற்றும் போலீசார் பள்ளிகளில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். வெடிபொருட்கள் எதுவும் சிக்காததால் புரளி என அறிவித்தனர். இந்த மிரட்டல் இ-மெயில் குறித்து சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.