ஜிஎஸ்டி வரி குறைப்பு சலுகை வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யுங்கள்: பியூஷ் கோயல் வேண்டுகோள்
ஜிஎஸ்டி வரி குறைப்பு சலுகை வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யுங்கள்: பியூஷ் கோயல் வேண்டுகோள்
ஜிஎஸ்டி வரி குறைப்பு சலுகை வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யுங்கள்: பியூஷ் கோயல் வேண்டுகோள்
ADDED : செப் 20, 2025 09:32 PM

புதுடில்லி: ஜிஎஸ்டி வரி குறைப்பு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தொழில் துறையினருக்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்தார்.
அண்மையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மத்திய அரசு மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்தது. ஜி.எஸ்.டி., அடுக்குகளை, நான்கிலிருந்து இரண்டாக குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மறு சீரமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி., வரும் 22ம் தேதி முதல் 5, 18 என்ற இரண்டு விகிதங்களில் மட்டுமே ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும். 12 மற்றும் 28 விகிதங்கள் நீக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது: செப்டம்பர் 22 முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
வணிகம் செய்வதையும் உற்பத்தியையும் எளிதாக்குவதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் அரசு செயல்பட்டு வருகிறது.
தயவு செய்து முழு பலனையும் நுகர்வோருக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இது தொழில் துறைக்கும் பயனளிக்கும். உலக நாடுகள், இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறது. இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.