Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ படப்பிடிப்பு கட்டணம் அதிரடி குறைப்பு ரூ.75,000ல் இருந்து ரூ.15,000 ஆனது ரூ.75,000ல் இருந்து ரூ.15,000 ஆக நிர்ணயம்

படப்பிடிப்பு கட்டணம் அதிரடி குறைப்பு ரூ.75,000ல் இருந்து ரூ.15,000 ஆனது ரூ.75,000ல் இருந்து ரூ.15,000 ஆக நிர்ணயம்

படப்பிடிப்பு கட்டணம் அதிரடி குறைப்பு ரூ.75,000ல் இருந்து ரூ.15,000 ஆனது ரூ.75,000ல் இருந்து ரூ.15,000 ஆக நிர்ணயம்

படப்பிடிப்பு கட்டணம் அதிரடி குறைப்பு ரூ.75,000ல் இருந்து ரூ.15,000 ஆனது ரூ.75,000ல் இருந்து ரூ.15,000 ஆக நிர்ணயம்

ADDED : செப் 20, 2025 09:35 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி:டில்லியில் சினிமா படப்பிடிப்பு நடத்த, எட்டு மணி நேரத்துக்கு 75,000 ரூபாயாக இருந்த கட்ட ணம் 15,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, 24 மணி நேரத்துக்கு 25,000 ரூபா யாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .

மேலும், டில்லி மாநகருக்குள் படப்பிடிப்புக்கு தேர்வு செய்யப்படும் இடம் மற்றும் நேரத்தைப் பொறுத்து, 3 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, டில்லி சுற்றுலாத் துறை அதிகாரி கூறியதாவது:

சாந்தினி சவுக் டில்லியில் சினிமா படப்பிடிப்பு நடத்த தற்போது 75,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டில்லி ஹாட் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு 80,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சினிமா மற்றும் 'டிவி' படப்பிடிப்புகளை ஊக்குவிக்க, படப்பிடிப்புக்கான கட்டணம் குறைக்கப்படுகிறது.

அதன்படி, படப்பிடிப்பு நடத்த எட்டு மணி நேரத்துக்கு, 15,000 ரூபாயும், 24 மணி நேரத்துக்கு 25,000 ரூபாயும் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், டில்லி மாநகரை அடையாளப்படுத்தும் விதமாக அமைந்துள்ள பாரம்பரிய இடங்களுக்கு இந்தக் கட்டணம் டில்லி மாநகருக்குள் சில முக்கிய இடங்களுக்குப் பொருந்தாது. முக்கிய இடங்களில் படப்பிடிப்புக்கு, 3 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படும். மேலும், ஜி.எஸ்.டி.,யும் செலுத்த வேண்டும்.

கன்னாட் பிளேஸ் மற்றும் சாந்தினி சவுக் ஆகியவை சினிமா தயாரிப்பாளர்களால் மிகவும் விரும்பப்படும் இடங்களாக அமைந்துள்ளன.

ஆனால், பாரத் மண்டபம், பன்சேரா பூங்கா, அசிதா பயோ-டைவர்சிட்டி பூங்கா மற்றும் மெஹ்ரூலி தொல்பொருள் பூங்கா ஆகியவையும் வருங்காலத்தில் சினிமாக்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கட்டணம் விளம்பரப் படங்கள் மற்றும் 'டிவி' விளம்பரங்களுக்கு பொருந்தாது. மும்பை, ஹைதராபாத் மாநகரங்களைப் போல தலைநகர் டில்லியும் சினிமா படப்பிடிப்புக்கான முக்கிய மையமாக மாறும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

50 சதவீதம்! சுற்றுலாத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

தலைநகர் டில்லியை கலை மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கான மையமாக மாற்ற திட்டமிட்டு உள்ளோம்.

டில்லி மாநகரில் உள்ள முக்கிய அரங்கங்களில் நிகழ்ச்சி நடத்த 50 சதவீதம் வரை கட்டணத்தை குறைப்பதாக இந்திய விளையாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

மத்திய இளைஞர் நலம், விளையாட்டு அமைச்சகம் மற்றும் டில்லி அரசு இணைந்து எடுத்த முயற்சியால் இந்தக் கட்டணக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பிரம்மாண்ட கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் சர்வதேச நிகழ்ச்சிகள் நடத்த பலர் முன்வருவர்.

டில்லி மாநகரை நாட்டின் கலாசார நிகழ்ச்சிகளுக்கான மையமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். டில்லியில் கட்டணம் அதிகம் என கருதியதால்தான் ஆமதாபாத், மும்பை, குருகிராம் மற்றும் நொய்டா போன்ற நகரங்களில் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

இனி, அதுபோன்ற நிகழ்ச்சிகள் டில்லியில் நடத்தப்படும். இதனால், டில்லி அரசுக்கு பொருளாதார ரீதியிலும் சற்று வளர்ச்சி ஏற்படும்.

இவ்வாறு கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us