Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பணம் தராததால் பா.ஜ.,வுக்கு தோல்வி ; காயத்ரி மகனிடம் குமுறிய தொண்டர்

பணம் தராததால் பா.ஜ.,வுக்கு தோல்வி ; காயத்ரி மகனிடம் குமுறிய தொண்டர்

பணம் தராததால் பா.ஜ.,வுக்கு தோல்வி ; காயத்ரி மகனிடம் குமுறிய தொண்டர்

பணம் தராததால் பா.ஜ.,வுக்கு தோல்வி ; காயத்ரி மகனிடம் குமுறிய தொண்டர்

ADDED : ஜூன் 08, 2024 04:38 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு : 'வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காததே, பா.ஜ., தோல்விக்கு காரணம்' என, கட்சி தொண்டர் ஒருவர், தாவணகெரே வேட்பாளரின் கணவரும், முன்னாள் எம்.பி.,யுமான சித்தேஸ்வரிடம் கூறிய ஆடியோ, சமூக வலைதளத்தில் பரவியுள்ளது.

தாவணகெரே தொகுதியில் எம்.பி.,யாக இருந்த சித்தேஸ்வர். லோக்சபா தேர்தலில் போட்டியிட 'சீட்' எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு பதிலாக, அவரது மனைவி காயத்ரிக்கு பா.ஜ., சீட் கொடுத்தது. தீவிர பிரசாரம் செய்தும், காயத்ரி தோல்வி அடைந்தார். இதனால் சித்தேஸ்வர் வருத்தத்தில் உள்ளார்.

தினமும் தொண்டர்கள், தலைவர்கள் போன் செய்து விசாரிப்பதால், வெறுப்படைந்த அவர், மொபைல் போனை தன் மகன் அனித்குமாரிடம் கொடுத்துள்ளார். பா.ஜ., தொண்டர் ஒருவர், அவரிடம் பேசியுள்ள ஆடியோ சமூக வலைதளத்தில் பரவியுள்ளது.

* உரையாடல்

இருவரின் உரையாடல் சாராம்சம்:

* தொண்டர்: நீங்கள் ஒரு ஓட்டுக்கு 300 ரூபாய் கொடுத்துள்ளீர்கள். 500 ரூபாய் கொடுத்திருந்தால், வெற்றி பெற்றிருப்பீர்கள். கட்சி தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

* அனித்குமார்: பணம் கொடுத்தும், சட்டசபை தேர்தலில் ரேணுகாச்சார்யா தோற்கவில்லையா?

* தொண்டர்: ரேணுகாச்சார்யா போன்று, நீங்களும் தோற்பீர்கள் என்றால், சீட் ஏன் பெற்றீர்கள்?

* அனித்குமார்: பிரதமர் நரேந்திர மோடியே 3.50 லட்சம் ஓட்டுகள் குறைவாக பெறவில்லையா?

* தொண்டர்: மேலும் 10 தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெற்றிருந்தால் மோடி, எளிதாக பிரதமர் ஆகியிருப்பார்.

* அனித்குமார்: உங்களுக்கு பணம் கொடுக்க, நாங்கள் லஞ்சம் வாங்கவில்லை. லஞ்சம் வாங்க தான் நான்கு முறை, எங்களை மக்கள் வெற்றி பெற வைத்தார்களா?

* தொண்டர்: மீண்டும் சீட் பெற, பணம் கொடுத்தீர்களா? தேர்தலில் பணம் கொடுக்காவிட்டால், நீங்கள் தேர்தலில் ஏன் சீட் பெற்றீர்கள்? பணம் உள்ள மற்றவருக்கு, வாய்ப்பு அளித்திருக்க வேண்டும்.

* அனித்குமார்: நாங்கள் சீட் கேட்கவில்லை. கேட்காவிட்டாலும், சீட் கொடுத்துள்ளனர்.

* தொண்டர்: நாங்கள் போன் செய்தால், கட் செய்கிறீர்கள்.

* அனித்குமார்: பணத்தை செலவிட்டும், தோல்வி அடைந்து மன வருத்தத்தில் இருக்கிறோம். நீங்கள் வேடிக்கை செய்கிறீர்களா? மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் நீங்கள் நில்லுங்கள், அப்போது கஷ்டம் தெரியும்.

* தொண்டர்: எங்கள் பூத்தில் உங்களுக்கு 'லீட்' கொடுத்துள்ளோம். தொண்டர்களை இப்படி பேசக் கூடாது. பசவராஜ் பொம்மை 100 ரூபாய் கொடுத்து வெற்றி பெறவில்லையா? தேர்தலில் 26,000 ஓட்டு வித்தியாசத்தில், காங்கிரஸ் வெற்றி பெற்றது. இது அதிகம் இல்லை. சிறிது முயற்சித்திருந்தால், நாம் வெற்றி பெற்றிருக்கலாம்.

* அனித்குமார்: அது எங்களுக்கும் தெரியும். எங்கள் நேரம் சரியில்லை.

* தொண்டர்: இது நேரம் இல்லை. இம்முறை, மக்கள் மோடியின் முகம் பார்த்து ஓட்டு போட்டுள்ளனர். நீங்கள் ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்திருந்தால், வெற்றி பெற்று பட்டாசு வெடித்திருக்கலாம்.

* அனித்குமார்: 500 ரூபாய் கொடுத்திருந்தால், வெற்றி பெற்றிருக்கலாம் என்கிறீர்கள். ஆனால் கட்சி சார்பில் எங்களுக்கு நிதி வழங்கவில்லை.

அதன்பின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

உள்நோக்கத்துடன், தொண்டருடன் நடந்த உரையாடலை பதிவு செய்துள்ளனர். நாங்கள் பணம் கொடுத்து, ஓட்டு வாங்க வேண்டுமா? நான் செய்த மேம்பாட்டுப் பணிகளுக்கு மதிப்பே இல்லையா? பிரதமர் மோடி மற்றும் என் சாதனைக்கு மக்கள் 6 லட்சம் ஓட்டுகள் கொடுத்துள்ளனர். வெற்றி, தோல்வி சகஜம். இது முடிவல்ல.

- ஜி.எம்.சித்தேஸ்வர், முன்னாள் எம்.பி.,

***





      Our Apps Available On




      Dinamalar

      Follow us