Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ முதல்வரிடமும் சி.பி.ஐ., விசாரணை பா.ஜ., - எம்.எல்.சி., வலியுறுத்தல்

முதல்வரிடமும் சி.பி.ஐ., விசாரணை பா.ஜ., - எம்.எல்.சி., வலியுறுத்தல்

முதல்வரிடமும் சி.பி.ஐ., விசாரணை பா.ஜ., - எம்.எல்.சி., வலியுறுத்தல்

முதல்வரிடமும் சி.பி.ஐ., விசாரணை பா.ஜ., - எம்.எல்.சி., வலியுறுத்தல்

ADDED : ஜூன் 08, 2024 04:35 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு : ''முதல்வருக்கு தெரியாமல் வால்மீகி மேம்பாடு ஆணையத்தின் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்திருக்க முடியாது. எனவே முதல்வர் சித்தராமையாவிடம், சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்,'' என, பா.ஜ., - எம்.எல்.சி., சலவாதி நாராயணசாமி வலியுறுத்தினார்.

பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:

நிதித்துறை பொறுப்பில் உள்ள, முதல்வரின் கவனத்துக்கு வராமல், வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருக்க முடியாது. முறைகேடு தொடர்பாக, அமைச்சர் நாகேந்திரா மட்டும் ராஜினாமா செய்தால் போதாது. இதற்கு பொறுப்பேற்று, முதல்வரும் ராஜினாமா செய்ய வேண்டும்.

வால்மீகி மேம்பாடு ஆணையத்தில் 187 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. பணிகளுக்கு டெண்டரும் கொடுக்கவில்லை; அரசு பணிகளுக்கும் பயன்படுத்தவில்லை. ஆனால் வெவ்வேறு கணக்குகள் துவக்கி, பரிமாற்றம் செய்துள்ளனர். பணத்தை ஏன் பரிமாற்றம் செய்தனர் என்ற கேள்விக்கு அரசிடமும், ஆணையத்திடமும் பதில் இல்லை.

தேர்தல் செலவுக்கு இந்த பணம் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து, விசாரணை நடத்த வேண்டும். ஒரு பக்கம் எஸ்.ஐ.டி., விசாரணை நடக்கிறது. மற்றொரு பக்கம் யூனியன் வங்கியின் புகாரின்படி, சி.பி.ஐ.,யும் விசாரணை நடத்துகிறது. ஒரே வழக்கில் இரண்டு விசாரணை நடத்த முடியாது.

வால்மீகி ஆணையத்தில் நடந்த முறைகேட்டை, மூடிமறைக்க அரசு முயற்சிக்கிறது. எங்களின் நெருக்கடியால், நாகேந்திரா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் சித்தராமையாவிடமும், சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்.

வேறு ஆணையங்களிலும், இதுபோன்று நடந்துள்ளதா, எந்த காரணத்தால் கணக்குகள் துவக்கப்பட்டன, தெலுங்கானாவில் உள்ள வங்கிக் கணக்குக்கு மாற்றியது ஏன்? பா.ஜ., போராட்டம் நடத்தாமல் இருந்திருந்தால், முறைகேட்டை அரசு மூடி மறைத்திருக்கும்.

எஸ்.சி., பிரிவுகளின் முன்னேற்றத்துக்காக ஒதுக்கிய 187 கோடி ரூபாய், தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல்வர் எவ்வளவு புத்திசாலி என்பதற்கு, இதுவே ஆதாரம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us