அம்பானி மகன் திருமணம் : மணமக்களை நேரில் வாழ்த்தினார் மோடி
அம்பானி மகன் திருமணம் : மணமக்களை நேரில் வாழ்த்தினார் மோடி
அம்பானி மகன் திருமணம் : மணமக்களை நேரில் வாழ்த்தினார் மோடி
ADDED : ஜூலை 13, 2024 09:12 PM

மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் திருமணத்தின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் பிரதமர் மோடி
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி - நீடா தம்பதியிரின் 3வது மகன் ஆனந்த், இவருக்கும் ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் மும்பையில் ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் நேற்று (ஜூலை 12-ம் தேதி ) கோலாகலமாக துவங்கியது. அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த வி.ஐ.பி.க்கள் , தொழிலதிபர்கள், முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்க மஹாராஷ்டிரா வந்துள்ள பிரதமர் மோடி , மும்பையில் இன்று நடந்த முகேஷ் அம்பானி மகன் திருமண ‛‛சுப ஆசீர்வாத்'' நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். முன்னதாக, பிரதமர் மோடியை வாசலில் வந்து வரவேற்று அழைத்து சென்றார் முகேஷ் அம்பானி.