தகவல் கமிஷன் அதிகாரங்கள்: உச்ச நீதிமன்றம் உறுதி
தகவல் கமிஷன் அதிகாரங்கள்: உச்ச நீதிமன்றம் உறுதி
தகவல் கமிஷன் அதிகாரங்கள்: உச்ச நீதிமன்றம் உறுதி
ADDED : ஜூலை 13, 2024 10:32 PM

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல்களை அளிப்பதை, சி.ஐ.சி., எனப்படும் மத்திய தகவல் கமிஷன் கண்காணிக்கிறது. தன் நிர்வாக செயல்பாட்டுக்காக, புதிய அமர்வுகளை அமைத்து, அதற்கான கட்டுப்பாடுகளை சி.ஐ.சி., நிர்ணயித்துள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், சி.ஐ.சி.,க்கு இது போன்ற அதிகாரம் கிடையாது என, 2010ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், சதீஷ் சந்திர சர்மா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசு நிர்வாகம் வெளிப்படையாகவும், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் தரும் வகையில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டது. இந்த சட்டத்தின் கீழ் சிறப்பாகவும், வெளிப்படை தன்மையுடனும் செயல்பட, இதுபோன்ற சில நடவடிக்கைகளை எடுக்க, சி.ஐ.சி.,க்கு அதிகாரம் உள்ளது. இதை சட்டம் நேரடியாக கூறாவிட்டாலும், மறைமுகமாக உறுதி செய்கிறது.அதன்படி, சிறப்பான நிர்வாகத்துக்காக அமர்வுகள் அமைப்பது, அதற்கான கட்டுப்பாடுகளை நிர்ணயிக்கும் அதிகாரம் சி.ஐ.சி.,க்கு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.