வரிசை கட்டி வெளியேறும் பி.ஆர்.எஸ்., எம்.எல்.ஏ.க்கள்:
வரிசை கட்டி வெளியேறும் பி.ஆர்.எஸ்., எம்.எல்.ஏ.க்கள்:
வரிசை கட்டி வெளியேறும் பி.ஆர்.எஸ்., எம்.எல்.ஏ.க்கள்:
ADDED : ஜூலை 13, 2024 08:43 PM

ஐதராபாத்: தெலுங்கானாவில் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சி எம்.எல்.ஏ., க்கள் அடுத்தடுத்து காங். கட்சியில் ஐக்கியமாகின்றனர்.
தெலுங்கானாவில் 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் 119 இடங்களில் காங்., 65 இடங்களிலும், பி.ஆர்.எஸ். கட்சி 39 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து பெரும்பான்மையுடன் காங். ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக ரேவந்த்ரெட்டி உள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இம்மாநில எதிர்க்கட்சியான பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சி எம்.எல்.ஏ.க்கள் காங். கட்சிக்கு தாவி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ராஜேந்திரா நகர் தொகுதி தெலுங்கானா கட்சி எம்.எல்.ஏ., பிரகாஷ் கவுடு அக்கட்சியிலிருந்து விலகி காங்., முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் காங்.கில் ஐக்கியமானார்.
இதுவரை பி.ஆர்.எஸ். கட்சியிலிருந்து 8 எம்.எல்.ஏ.க்கள் விலகியுள்ளதால் சட்டசபையில் பி.ஆர்.எஸ்., கட்சி பலம் குறைந்து வருகிறது.
கட்சியை காங்.குடன் இணைக்க ராவ் முடிவு ?
முன்னதாக பி.ஆர்.எஸ். கட்சி வட்டாரங்கள் கூறுகையில், அடுத்தடுத்து எம்.எல்.ஏ.க்கள் ஓட்டமெடுப்பதால் பி.ஆர்.எஸ். கட்சி பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசுடன் இணைந்து விடலாம் எனவும், 4 ராஜ்யசபா எம்.பி.க்கள் பா.ஜ..வுடன் இணையலாம் எனவும் அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அக்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரசேகரராவ் கட்சியை காங்.குடன் இணைப்பதா, பா.ஜ.வுடன் இணைப்பதா என ஆலோசித்து வருகிறார். விரைவில் அறிவிப்பு வரலாம்.