Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பத்திரிகையாளரின் கார் மீது மர்ம கும்பல் கொடூர தாக்குதல்

பத்திரிகையாளரின் கார் மீது மர்ம கும்பல் கொடூர தாக்குதல்

பத்திரிகையாளரின் கார் மீது மர்ம கும்பல் கொடூர தாக்குதல்

பத்திரிகையாளரின் கார் மீது மர்ம கும்பல் கொடூர தாக்குதல்

ADDED : பிப் 10, 2024 11:27 PM


Google News
புனே பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி குறித்து விமர்சித்த மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பத்திரிகையாளரின் காரை, ஒரு கும்பல் அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைதளம்


பா.ஜ., மூத்த தலைவரான அத்வானிக்கு, நம் நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' வழங்கப்படும் என, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

இதுகுறித்து மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் நிகில் வாக்லே, பிரதமர் மோடி மற்றும் அத்வானி குறித்து விமர்சித்தார்.

இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், பா.ஜ.,வினர் பலர் தங்கள் கண்டனங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இதுதொடர்பாக நிகில் வாக்லே மீது பா.ஜ., தலைவர் சுனில் தியோதர் புகார் அளித்ததன்படி, அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், நேற்று மஹாராஷ்டிராவின் புனேவில் உருட்டு கட்டை, இரும்பு ராடு, ஹாக்கி மட்டை, முட்டை போன்றவற்றுடன் ஒரு கும்பல், நிகில் வாக்லேவின் காரை சூழ்ந்து தாக்கியது. இதில், அவரது கார் முற்றிலும் சேதமானது.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் நிகில் வாக்லே குறிப்பிடுகையில், 'இதுவரை என் மீது ஆறு முறை தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

நடவடிக்கை


'இதுபோன்ற தாக்குதல்களுக்கு அஞ்சும் கலாசாரம் எங்களிடம் இல்லை; இவை அனைத்தும், போலீசாரின் ஒத்துழைப்புடன் அரங்கேறி உள்ளன' என பதிவிட்டு உள்ளார்.

இதுதொடர்பாக மஹாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறுகையில், ''தாக்குதலில் ஈடுபட்டோர் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பர்; அது பா.ஜ.,வினராக இருந்தாலும் சட்டத்தை கையில் எடுப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us