ஆயுள் காப்பீடு மீது ஜி.எஸ்.டி.,: வாபஸ் பெற மம்தா வலியுறுத்தல்
ஆயுள் காப்பீடு மீது ஜி.எஸ்.டி.,: வாபஸ் பெற மம்தா வலியுறுத்தல்
ஆயுள் காப்பீடு மீது ஜி.எஸ்.டி.,: வாபஸ் பெற மம்தா வலியுறுத்தல்
ADDED : ஆக 02, 2024 06:06 PM

புதுடில்லி: 'ஆயுள் காப்பீடு, சுகாதார காப்பீடு பிரீமியத்தின் மீதான ஜி,எஸ்.டி.யை திரும்ப பெற வேண்டும். வரி விதிப்பதால் சாமானிய மக்களின் நிதிச்சுமை அதிகரித்துள்ளது' என மேற்கு வங்க முதல்வர் மம்தா தெரிவித்தார்.
இது தொடர்பாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதம்: ஆயுள் காப்பீடு, சுகாதார காப்பீடு பிரீமியத்தின் மீதான 18 சதவீத ஜி,எஸ்.டி.,யை திரும்ப பெற வேண்டும். என்னை பொறுத்தவரை வரி விதிப்பது மக்களுக்கு செய்யும் துரோகம்.
போராட்டம்
வரி விதிப்பதால் சாமானிய மக்களின் நிதிச்சுமை அதிகரித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாங்கள் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு மம்தா கூறியுள்ளார்.
முன்னதாக, ஆயுள் காப்பீடு, சுகாதார காப்பீடு பிரீமியத்தின் மீதான ஜி.எஸ்.டி.,யை திரும்ப பெற வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் வலியுறுத்தியுள்ளார்.