கெரேகோடு பிரச்னை 3 வழக்குகள் பதிவு
கெரேகோடு பிரச்னை 3 வழக்குகள் பதிவு
கெரேகோடு பிரச்னை 3 வழக்குகள் பதிவு
ADDED : ஜன 31, 2024 12:08 AM
மாண்டியா : ஹனுமன் உருவம் பொறித்த கொடியை அகற்றியதால், கெரேகோடு கிராமத்தில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக, போலீசார் மூன்று வழக்குகள் பதிவாகி உள்ளது.
மாண்டியா மாவட்டம், கெரேகோடு கிராமத்தில் கம்பம் அமைத்து, ஹனுமன் உருவம் பொறித்த கொடியை இறக்கிய விவகாரம், பூதாகரமாக வெடித்தது. ஹிந்து அமைப்பினருடன் இணைந்து பா.ஜ., - ம.ஜ.த.,வினர் ஊர்வலம் நடத்தினர்.
அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவி கனிகாவின் பேனர் மீது கல்வீசப்பட்டது. பேனர்களை கிழித்து சிலர் தீ வைத்தனர். குருபர் சங்க அலுவலகம் மீது கல்வீசி தாக்கியதில் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின.
இந்த வன்முறை சம்பவங்கள் குறித்து டி.எஸ்.பி., சிவமூர்த்தி அளித்த தனித்தனி புகார்களின்பேரில், இரண்டு வழக்குகள் பதிவாகி உள்ளன. மூன்று வழக்குகளிலும் சேர்த்து 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தற்போது புது தகவல் கிடைத்துள்ளது. அதாவது கெரேகோடு கிராம பஞ்சாயத்தில் காங்கிரஸ், பா.ஜ., - ம.ஜ.த., கட்சிகளுக்கு 22 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் அனைவரும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி, கெரேகோடு கிராமத்தில் கம்பம் அமைத்து, ஹனுமன் கொடி ஏற்ற முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
இதுதொடர்பாக கிராம பஞ்சாயத்து நடவடிக்கைகள் பற்றி குறிப்பிடப்படும், புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த புத்தகத்தை தற்போது காணவில்லை என, கிராம பஞ்சாயத்து செயலர் ரத்னம்மா கூறி உள்ளார்.