பொற்கோவிலில் யோகாசனம்: குருத்வாரா கமிட்டி கண்டனம்
பொற்கோவிலில் யோகாசனம்: குருத்வாரா கமிட்டி கண்டனம்
பொற்கோவிலில் யோகாசனம்: குருத்வாரா கமிட்டி கண்டனம்
UPDATED : ஜூன் 22, 2024 08:14 PM
ADDED : ஜூன் 22, 2024 08:08 PM

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோவில் வளாகத்தில் பெண் ஒருவர் யோகாசனம் செய்த வீடியோ வைரலானது. இச்செயலுக்கு குருத்வாரா கமிட்டி கண்டனம் தெரிவித்து உள்ளது.
கடந்த 21 ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் யோகாசனம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு அமைப்புகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து சிறப்பித்திருந்தது.
இந்நிலையில் அர்ச்சனா மக்வானா என்ற பெண் யோகா பயிற்சியாளர், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் அமைந்துள்ள பொற்கோவிலில் வளாகத்தில் ஒரு சில ஆசனங்கள் செய்து அதனை சமூக வலை தளத்தில் பதிவிட்டார்.
யோகாசனம் நிகழ்ச்சி சமூக வலை தளத்தில் வைரலானதை அடுத்து பொற்கோவிலின் சிரோன்மணி குருத்வாரா பர்பந்தக்கமிட்டி கண்டனம் தெரிவித்து போலீசில் புகார் அளித்துள்ளது,
இதனையடுத்து மக்வானா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்கியுள்ளார். தொடர்ந்து தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு வெளிட்ட பதிவில் யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்த விரும்பவில்லை என்றும்,குர்த்வாரா சாஹிப் வளாகத்தில் யோகா பயிற்சி செய்வது சிலருக்கு புண்படுத்தும் என்பதை நான் அறிந்திருக்கவில்லை, ஏனென்றால் நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன், யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லை என்றும் நான் ஏற்படுத்திய காயங்களுக்கு நான் உண்மையாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், மேலும் எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். தயவுசெய்து எனது உண்மையான மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்,' என்று அவர் மேலும் கூறினார்.
மக்வானா மன்னிப்பு கேட்ட போதிலும் தனக்கு தொலை பேசி மூலம் கொலை மிரட்டல் வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.